மஞ்சள் சித்திரவடிவ வைரசு நோய் கட்டுப்பாடு

மஞ்சள் சித்திரவடிவ வைரஸ் ஒரு தாவர நோய்க்கிருமியாகும், இது சோலனேசி மற்றும் குக்குர்பிடேசி குடும்பங்களில் உள்ள பல்வேறு தாவரங்களை பாதிக்கிறது. இது இலைகளில் தனித்துவமான மஞ்சள் வடிவங்களைத் உருவாக்குகிறது. இது பயிர் விளைச்சலைக் குறைக்க வழிவகுக்கிறது. இந்த வைரஸ் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகிறது, பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை நிர்வகித்தல் மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். மஞ்சள் மொசைக் வைரஸின் அறிகுறிகள், பரவுதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம், தோட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பயிர்களை அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

Aug 10, 2023 - 03:30
Aug 10, 2023 - 16:12
 0  15
மஞ்சள்  சித்திரவடிவ வைரசு நோய் கட்டுப்பாடு
yellow-mosaic-virus

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மண்டியாவிலுள்ள  விவசாயக் கல்லூரி வி.சி பார்ம் எனும் இடத்தில் இந்த ஆய்வு நடாத்தப்பட்டது. இதன் பெறுபேறுகளை பற்றி இந்தக்கட்டுரையில் பார்ப்போம்.

 ஆய்வின் சுருக்கம்

வெவ்வேறு கலவையைப் (இரசாயணகலவை  சேதனகலவை)  பயன்படுத்தி மஞ்சள் சித்திரவடிவ வைரசு நோயை கட்டுப்படுத்துவதற்கான கள சோதனை 2017 இல் கிர்ப் எனுமிடத்தில் நடத்தப்பட்டது. பயன்படுத்தப்பட்ட கலவைகளில் இமிடா குளோபிட்டினைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வு பயனுடையதாகவும்  திருப்திகரமானதாகவும்  இருந்தது.

600 எப் எஸ் பெறுமானத்தினைக்கொண்ட இமிடாகுளோபிட்டினை ஒரு கிலோவிற்கு 5 மில்லிலீட்டர் என்ற அளவில் விதைப்பரிகரணம் செய்யலாம். அதேபோல் 17.8 எஸ்.எல் பெறுமானத்தினைக்கொண்ட இமிடாகுளோபிட்டினை லீட்டருக்கு 0.5 5 மில்லி லீட்டர் என்ற அளவில்  விதைத்து 15 நாட்களுக்கு பிறகு விதைத்து 30 நாட்களுக்கு பிறகு  விதைத்து 45 நாட்களுக்கு பிறகு  என மூன்று தடவைகளில் தெளிக்கலாம்.

ஆய்வின் முடிவு

இவ்வாறு  விதைப்பரிகரணம்  செய்யும் போதும் தெளிப்பானில் தெளிக்கும் போதும் தாவர வளர்ச்சி சிறப்பானதாகவும் உயர்விளைச்சலைப் பெறக்கூடியதாகவும் இருந்தது. ஆய்வுக்கு முன்னரான காலப்பகுதிகில் பெறப்பட்ட  தகவல்களின் படி 26.98 வீதம் நோய் தொற்று அபாயம் இருந்தது.பின்னர் அது இல்லாது குறைக்கப்பட்டது அதே போல் சித்திரவடிவ வைரசு நோயின் காவிகளான வெண்பூச்சிகளது  எண்ணிக்கையானது குறைந்து போனது. தாவரம் ஒன்றுக்கு 6.86 வெண் பூச்சியிலிருந்து 1.86 பூச்சியாக குறைந்து போனது

 

இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk  எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது  greenlankamentors pvt ltd இனது ஒர்  தயாரிப்பாகும். 

ஆய்வு செய்தவர்கள்

  • அர்ச்சனா எஸ் தாவர நோயியல் துறை,வேளாண் கல்லூரி,வேளாண் பல்கலைக்கழகம்
  • அறிவியல், பெங்களூரு, கர்நாடகா,இந்தியா
  • இ வெங்கடேஷ் தாவர நோயியல் துறை,வேளாண் கல்லூரி, வி.சி பண்ணை,மண்ட்யா, கர்நாடகா, இந்தியா
  • இ பத்மஜா தாவர நோயியல் துறை,வேளாண் கல்லூரி, வி.சி பண்ணை,மண்ட்யா, கர்நாடகா, இந்தியா
  • ஏ.எஸ்இ நாகராஜு என் தாவர நோயியல் துறை,வேளாண் கல்லூரி, வி.சி பண்ணை,மண்ட்யா, கர்நாடகா, இந்தியா
  • மஞ்சுநாத என் விதை தொழில்நுட்ப பிரிவு, ICAR- இந்தியன் கிராஸ்லேண்ட் மற்றும் தீவனம் ஆராய்ச்சி நிறுவனம்,ஜான்சி, உத்தரபிரதேசம், இந்தியா

 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

1.மேற் குறித்த தகவலை உங்கள் நண்பர்களும் பயன்பெறுவதற்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

2.மேலதீக கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் தேவைப்படுபவற்றை கொமண்ட் செய்யவும்.எமது தளத்தில் Log in /Sign-Up செய்யாமலே கொமண்ட செய்ய முடியும்(முகநூல் வழியாக)

https://www.instagram.com/reel/CuI0r7gIJV0/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

3.எமது தகவல்களை முகநூலில் அறிந்து கொள்ள எமது விவசாயத்தகவல்கள் முகநூல் பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/விவசாய-தகவல்கள்-582332455436969/?ref=pages_you_manage

ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி பாதுகாப்பு தன்மையுடன் உங்கள் தொலைபேசி இலக்கத்தை பிறர் அறிந்து கொள்ள முடியாத வகையில் எமது வைபர் கொமியூனிட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
https://invite.viber.com/?g2=AQB6eG9WRodwG0yyQo300oUspfENgull%2Bx471GwTQ77OxNvkkMoI5IEIn7elac1O

எமது தகவல்களை காணொளி வடிவில் அறிந்து கொள்ள எமது யூரிப் சனலை subscribe  செய்து கொள்ளுங்கள்

இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk  எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது  greenlankamentors pvt ltd இனது ஒர்  தயாரிப்பாகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow