இலங்கையின் நிலத்தடி நீரை அபகரிக்கும் டிக்டொக் பிரபலம்
விவசாயம் சார்ந்து விவசாயத்திலுள்ள பிரச்சனைகளை பற்றி மட்டும் விவாதிக்கும் நாம் குறித்த டிக்டொக் ராசன் மீது எந்தவொரு தனிப்பட்ட வன்மத்தையும் வெளிப்படுத்தும நோக்கத்தில் இந்த கட்டுரையை வெளியிடவில்லை
ஒரு சமூக ஊடகத்தின் பாதிப்பும் புலம்பெயர் தமிழர்களின் பாதிப்பும் சமீப காலமாக இலங்கையின் தமிழர்பகுதிகளில் பின்விளைவுகளை உருவாக்கி வருவதை காணகூடியதாக இருக்கிறது. சமூக ஊடகத்தில் பிரபல்யமாக உருவாக பலர் என்ன என்னமோ எல்லாம் செய்கிறார்கள்... நன்மை செய்கிறார்கள், தீமை செய்கிறார்கள், நகைச்சுவை செய்கிறார்கள், விழிப்புணர்வு செய்கிறார்கள், உதவி செய்கிறார்கள்...
உதவி வெய்தாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருப்பது நல்லது என்பார்கள். டிக்டொக் சமூக வலைத்தளத்தில் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் பிரபல்யமாக இருக்கும் ராசன் எனும் நபர் இலங்கையில் தமிழர் பரப்பில் புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் இதுவரை 100 குழாய்கிணறு அடித்துக்கொடுத்துள்ளார். இவற்றின் பயன்பாடு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை.
வட,கிழக்கின் நீராதாரம் பற்றிய பல ஆராய்ச்சிகளில் ஏற்கனவே குழாய்கிணறு எண்ணிக்கையால் நீரின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குழாய்கிணறு தோண்டுவதற்கு உரிய முறையில் விண்ணப்பித்து அதன் பின்னரே குழாய்கிணறு தோண்டப்பட வேண்டும் வெளிநாட்டுக்காசில் குழாய் கிணறு, அதில் முகம் காட்டி வீடியோ எடுத்து பிரபல்யமாகுவதற்கு கிடைத்த இடம் , இலங்கையின் தமிழர் பகுதிகள்.ராசன் உட்பட வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் எந்தவிதமான சட்ட ஆலோசனைகள் இன்றி நிலத்தை நீர்வளத்தை தோண்ட முடியாது. இந்த 100 குழாய் கிணறுக்கும் அரச அனுமதி கிடைக்கப்பபெற்றதா என்பது இவர்களுக்கு தான் வெளிச்சம் ...
இலங்கையில் நீரிழிவு நோய்கான காரணிகளில் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துவதை காரணங்காட்டி குழாய்கினறு தோண்டுவதற்கு பதிலாக மழைநீரை சேமிக்கும் திட்டம் வடகிழக்கு பகுதிகளில் உலக நிறுவனம் நடத்தி இருந்தது. குறிப்பாக வடபகுதியில் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த இந்த திட்டம் 2019 முதல் 2021 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்படியான வவுனியா மாவட்டத்தில் தான் டிக்டொக் ராசன் 100 வது குழாய் கிணறை அடித்து இருந்தார் இதற்காக இவருக்கு பாடசாலை ஒன்றில் பாராட்டு விழா கூட செய்து இருந்தார்கள். பாடசாலை சமூகம் இந்த தவறான முன்னுதாரணத்தை பாராட்டியதற்கு வெட்கப்பட வேண்டும்.
விவசாயம் சார்ந்து விவசாயத்திலுள்ள பிரச்சனைகள், தொழில்நுட்ப தகவல்கள் பற்றி மட்டும் விவாதிக்கும் நாம், குறித்த டிக்டொக் ராசன் மீது எந்தவொரு தனிப்பட்ட வன்மத்தையும் வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த கட்டுரையை வெளியிடவில்லை. அவர்களுக்கு இருக்கும் சமூகவலைத்தளத்தின் மீதான கவனத்தை பார்த்தால் அடுத்த வருடத்திற்குள் 1000 குழாய் கிணறை அடித்து விடுவார்கள் போல உள்ளது என்ற பயமும் அதற்கு பின்னர் எதிர்கால நீராதாரம் பற்றிய கேள்வியுமே எம்மை எழத வைத்துள்ளது,,, இப்படி குழாய் கிணறை அடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் ஆபத்தாகும்...
குழாய் கிணறுகள் நிலத்தடி நீரை தொடர்ச்சியாக எடுப்பதால் பல தீவிரமான விளைவுகள் ஏற்படலாம். அவற்றில் சில:
நிலத்தடி நீர் மட்டம் குறைதல்:
குழாய் கிணறுகள் அதிக அளவு நிலத்தடி நீரை எடுக்கும்போது நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இது வீடுகள், விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு குடிநீர் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், குழாய் கிணறுகள் வறண்டுவிடலாம் மற்றும் நிலத்தடி நீர் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
உப்புநீர் ஊடுருவல்: கடற்கரைப் பகுதிகளில், நிலத்தடி நீர் எடுக்கப்படும்போது, உப்புநீர் நிலத்தடி நீரை நோக்கி ஊடுருவ வாய்ப்புள்ளது. இது குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறும்.
மண் அரிப்பு: நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது,மண் அரிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும்.
பூமி வெடிப்பு: நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது, மண் சுருங்கி பூமி வெடிப்புகள் ஏற்படலாம். இது கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
நிலத்தடி நீர் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு: நிலத்தடி நீர் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள்இ நிலத்தடி நீரை நம்பியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாகும். நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதிக்கப்படலாம் மற்றும் அழிக்கப்படலாம்.
புலம்பெயர் தமிழர்களின் கனத்திற்கு
உங்கள் நிதியில் நல்லது செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானது ஆனால் அதிகமான குழாய்கிணறுகளை தொடர்ச்சியாக மண்ணில் தோன்றினால் நீர்வளம் பாவனைக்குரியதாக இல்லாமல் பேய்விடும் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்குவதற்கு மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்
ஆதாரம்
எமது கட்டுரைக்கு ஆதாரம் தேவை எனில் google scholar இல் சென்று srilanka tubewell என இட்டு search செய்து பார்த் தால் ஏராளமான விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகளை பார்க்க முடியும் .
What's Your Reaction?