இனிமேல் இலங்கையில் வீட்டிலிருந்தவாறே மரக்கறி பொருட்களை வாங்கலாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சி

இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக விவசாயபீடத்தின் மாணவனும் தற்போதைய பகுதி நேர விரிவுரையாளராகவும் இந்திரா குழுமத்தின் தலைவருமான மகேஸ்வரன் ரஜீதன் அவர்களும் இணைந்து உருவாக்கி வரும் தொழில் முயற்சி இதுவாகும்...

Dec 4, 2023 - 06:06
Dec 4, 2023 - 06:13
 0  464
இனிமேல் இலங்கையில் வீட்டிலிருந்தவாறே மரக்கறி பொருட்களை வாங்கலாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சி
Inthiramart

இலங்கையில் விவசாய உற்பத்திகளை விவசாயிகள் சந்தைப்படுத்த முடியாமையும் மக்கள் அதிக விலை கொடுத்து மரக்கறி மற்றும் பிற உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டிய நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில் இந்த நிலைமை இலங்கையில் அதிதீவிரமாக இருந்தது. 

உற்பத்திப் பொருட்களை கையாளுதல் சந்தைப்படுத்துதல் என   பல வழிகளில்  விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். வீதியில் இறங்கி கிடைத்த காசுக்கு பொருட்களை விற்பனை செய்த சம்பங்களும் நடந்தன. 

 காய்கறி விவசாயிகளது உற்பத்தி பற்றிய  தகவல்களை திரட்டுவதில் மட்டும் சில திணைக்களங்கள் ஈடுபட்டன. சில பிரதேச செயலகங்கள் சுயமாக சிந்தித்து விவசாயிகளது உற்பத்திகளை சந்தைப்படுத்த உதவின.

இந்த சந்தப்பத்தில் பலரது சிந்தனையும் ஒன்லைன் மூலமாக விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவது பற்றி ஆகும் 
ஆனால் இதற்கான பொறிமுறை ஒன்று அதுவரை இருக்கவில்லை. சில முயற்சியாளர்கள்  முன்னர் ஆரம்பித்த போதிலும்  ஆரம்பித்த வேகத்தில் இதுபோன்ற முயற்சிகளை விட்டுவிட்டார்கள். 

ஆனால் ஒரு குழு மட்டும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு   வியாபார திட்டத்தை ஆரம்பித்தது. 

கூகுள் போம் (google form )  வழியாக ஓடர்களை பெற்று துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள், இலத்திரனியல் கார் மூலம் மக்களது வீட்டிற்கே உற்பத்தி பொருட்களை டெலிவரி செய்தார்கள். 


google form   ஊடாக காய்கறிகள் பழங்களை முன்பதிவு செய்து அவற்றை வீட்டு வாசலில் விநியோகித்த  இந்த புதிய முயற்சியானது தற்பொழுது புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜூ பி எல் மற்றும்  யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞான துறையினருடன் இணைந்து தற்போது ஆப் வடிவில் இந்த சேவையை வழங்க உள்ளனர்.

இந்த முயற்சிக்கு யாழ்பல்கலைக்கழக  ஜூ பி எல்  (UBL) இந்திரா குழுமத்திற்கான மரக்கறிகள் பழங்களை முன்பதிவு செய்யும் மற்றும் விநியோகிக்கும் செயலி மற்றும் இணையதளம் என்பன செய்து தருவதுடன்  தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேம்படுத்தல் வசதிகளையும் மேற்கொள்ள பெருமனம் கொண்டு முன்வந்துள்ளார்கள் இந்த சமூக வியாபார முயற்சி கிளிநொச்சியில்  தோற்றம் பெற்றதாலும் இந்திரா குழுமத்தின் தலைவர் யாழ்பல்கலைக்கழக  விவசாய பீடத்தின்  பட்டதாரியாக  இருப்பதனாலும் இந்த வரலாற்று நிகழ்வை அறிவியல நகர் விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடாத்துவது என தீர்மானித்துள்னர்  இந்த நிகழ்விற்கு அன்பர்கள் நண்பர்கள் வாடிக்கையாளர்கள் விவசாயிகளின் நலன் விரும்பிகள் இலங்கை திருநாட்டின்  பொருளாதார அபிவிருத்தியில் ஆர்வம் உடையவர்கள் என அனைவரையும் வரவேற்கின்நனர் விழா ஏற்பாட்டாளர்கள். 

இந்த ஆப் மற்றும் இணையதளம் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:30 மணிக்கு விவசாயபீடத்தில் வைத்து வெளியிடப்படும் .

 Inthiramart  ஆப் மற்றும் இணையதளம் பற்றி  

InthiraMart," விவசாயப் பொருட்கள், புதிய விளைபொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்குகின்றது

விவசாயிகளை வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது, 

விவசாயப் பொருட்கள் மற்றும் சேவைகளை விவசாயத்தை மேலும் திறம்படச் செய்ய வழங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு  புதிய பழங்கள்  காய்கறிகள் மற்றும் மற்ற விவசாயப் பொருட்களை  உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெற்று வழங்குகின்றது 

வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் பொருட்களின் தரம் இரண்டும் இவர்களது பிரதான குறிக்கோளாகும் .

Download Inthiramart  app 

https://play.google.com/store/apps/details?id=com.App.inthiramart&pcampaignid=web_share

  Inthiramart  Website Link

 link>>>>> InthiraMart 

InthiraMart இல் ஆர்டர் செய்ய, நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றவும் 

  • https://www.inthiramart.com என்ற  இணையதளத்திற்கு செல்லவும்
  • அல்லது google playstore  இல் inthiramart app இனை டவுன் லோட் செய்யவும்
  • நீங்கள் வாங்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை உங்கள் basket இல்  சேர்க்கவும்.
  • செக் அவுட் செய்து, உங்கள் டெலிவரி முகவரி மற்றும் கட்டண விவரங்கள் போன்ற தேவையான தகவல்களை வழங்கவும்.
  • உங்கள் ஆர்டரை மதிப்பாய்வு செய்து   நீங்கள் பொருட்கள் வாங்குவதை உறுதிப்படுத்தவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow