நெல் காயப்போடும் தளத்தில் அசோலா வளர்ப்பு

நெல் உலர்த்தும் இடங்களில் அசோலாவை பயிரிடக் கூறி உலகளவில் விவசாயப்புரட்சியை ஏற்படுத்த தனது உத்தியோகத்தர்களை பணித்து அந்த முட்டாள்தனத்தினை அறிக்கை வடிவில் பெறத்துணிந்த ஒரு மாவீரனின் கதை இது..

UACUAC
Aug 31, 2023 - 21:45
Nov 22, 2023 - 17:25
 0  172
நெல் காயப்போடும் தளத்தில் அசோலா வளர்ப்பு

விவசாயம் பற்றி யாரும் உரையாடலாம் அதில் யாரும் முதலீடு செய்யலாம் இலாபம் பெறலாம் முதலீட்டை விரயமாக்கலாம்,  விரும்பினால் தொடரலாம்,  நிறுத்த நினைத்தால் நிறுத்தலாம்.

விவசாயம் என்பது திறந்த சந்தை வாய்ப்பை வழங்குவதாகும்  ஆங்கிலத்தில் பொருளியல் தொடர்பாக இக்கருத்து   open competitive market என அழைப்பார்கள்.  அதே போல்  யாரும் அறிவுரை சொல்லலாம்  அந்த அறிவுரையை யாரும் கேட்கலாம் கேட்காமலும் விடலாம். அறிவுரை விவசாயிகளுக்கு இலாபகரமாக நேரத்தை குறைப்பதாக உற்பத்தி செலவை குறைத்தால் நல்லது. அது இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தினால் அறிவரை சொன்னவரும் கேட்டவருமே  பொறுப்பாளிகள். விவசாயம் என்பது இவர்களுக்கு தான் உரியது இவர்கள் தான் செய்ய வேண்டும் இவர்கள் தான் ஆலோசனை செய்ய வேண்டும் என்று கிடையாது. விவசாயம் யாருடையதும் காப்புரிமை பெற்ற சொத்து கிடையாது. 

இந்த அறிவுரையே வழங்குவதற்காக  அரசாங்கம் ஒரு துறையை உருவாக்கி ம‌க்களுக்கு விவசாயம் சம்பந்தமான அறிவுரையை வழங்குவதற்காக ஒரு திணைக்களத்தின் மூலம் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கும் போது மிக சரியான தகவல்களை  மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான முறையை வழங்குவது முக்கியமானதும் பொறுப்புடையதும் ஆகும். 

அறிமுகம்

அசோலா: ஒரு பசுமைப் புரட்சி

அசோலா ஒரு சிறிய நீர்வாழ் தாவரமாகும், இது குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளின் மேற்பரப்பில் மிதக்கிறது. இது அதன் விரைவான வளர்ச்சி விகிதம் மற்றும் வளிமண்டலத்தில் இருந்து நைட்ரஜனை சரிசெய்யும் திறனுக்காக அறியப்படுகிறது, இது பயிர்களுக்கு இயற்கை உரத்தின் மதிப்புமிக்க ஆதாரமாக அமைகிறது.

புதிதாக ஒரு விவசாய முறையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கு  பின்வரும் நன்மைகள் கிடைக்க வேண்டும்.

1.விளைச்சல் அதிகரிக்க வேண்டும்

2.உற்பத்தி செலவு குறைய வேண்டும்

3.வேலை செய்யும் நேரம் குறைய வேண்டும்

4.விற்பனை அல்லது பெறுமதி சேர் பொருள் விற்பனை மூலம் இலாபம் கிடைக்க கூடியதாக இருத்தல் வேண்டும்.

5.நீண்ட கால தீர்வாக இருத்தல் வேண்டும்

மேற்குறிப்பிட்ட விஷயங்களோடு விவசாய துறையில் புதியவற்றை புதிய நுட்பத்தை  கொண்டு வரும் போது அதில் நேர்த்தி மற்றும் நீடித்த தன்மை வேண்டும்.மேலும் அது சரியான ஒரு பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருத்தல் வேண்டும்

 அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினை

தாவர வளர்ச்சிக்கு சேதன முறையில்  போசனையை வழங்குதல் 

 தீர்வுகள் 

  • சேதனப்பசளை 
  • அசோலா பாவனை 

 

அசோலாவின் மூலம் சேதனப் பசளையை வழங்க அசோலாவை விவசாயிகள் பாவிக்கும் அளவை அதிகரித்து அதன் மூலம் சேதன விவசாயத்தை அதிகரித்து விளைச்சலை அதிகரித்தல்

வழிமுறை 

விவசாயிகளை அசோலா வளர்க்க செய்வதை ஊக்குவிக்க உலகின் எந்த பகுதியிலும் இல்லாத உலக வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் அதிலும் வடமாகாணத்தில் நெல் காயப்போடும் தளங்களில் நீரை இறைத்து நீர் வெளியேறாமல் தடுத்து அசோலாவை இட்டு வளர்த்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை விவசாயிகளுக்கு காட்டுதல் அதன் மூலம் அசோலா உற்பத்தியை ஊக்குவித்தல் தான் திட்டம்.

அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினையில் உள்ள பிரச்சனை 

உலகளவில் முழுமையான சேதன விவசாயத்தின் சாத்தியப்பாடுகள் பற்றி பல குழப்பங்கள் உள்ளது.எமது நாடு பிழையான சேதன விவசாயக் கொள்கைக்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு,

மேலும் நெற்செய்கை விவசாயத்தில் மாத்திரமே பசுமையான  அசோலாவை இட்டு பயன்படுத்த முடியும். ஏனெனில் வியாபார ரீதியிலான முக்கியத்துவமான பயிர்களில் எமது நாட்டில் வேறெந்த பயிரும் நீர் நின்று வளர்வது இல்லை

 

அசோலாவை நெல் வயலில் இடுவதில் உள்ள கருத்து ரீதியிலான சிக்கல் தன்மைகள் 

  1. அசோலாவை நெற்செய்கையில் இடுவதால் பாரியளவு விளைச்சல் மாற்றம் அல்லது அசேதன உரப்பாவனையின் அளவு குறைந்துள்ளது என்ற எந்தவிதமான ஆய்வுப்பூர்வமான தகவலும் ஆராய்ச்சியும் ஆராய்ச்சிக்கான பதிவுகளும் அதிகமாக இல்லை.. அதே போலஅசோலா  பயன்படுத்தப்பட்ட வடமாகாணத்திலும் விளைச்சலில் பெரியளவு மாற்றம் இருந்தது இருக்கிறது என்பதற்hன சான்றாதாரங்கள் இல்லை. 

உதாரணமாக 

  1. மன்னாரில் ஒரு ஏக்கரில் BG360 நெல்லிற்கு 40 மூடை கிடைக்கும் விளைச்சலில் இது  எந்த பங்களிப்பும் செய்ய இல்லை.

2.கிளிநொச்சியில் ஒரு ஏக்கரில் ஆட்டக்காரி நெல்லில் கிடைக்கும் 40- 45 மூடை கிடைக்கும் விளைச்சலில் இது  எந்த பங்களிப்பும் செய்ய இல்லை.

மாறாக சிறுபோகத்தில் சிறுதானியம் செய்யப்பட்ட தரைகளில் இரசாயன உரத்தின் பாவனை குறைவாக பயன்படுத்தப்பட்டதும் அந்த தரையில் விளையும் பயிரின் நிறம் மற்றும் விளைச்சலில் விவசாயிகளுக்கு திருப்தி அடையப்பட்டவை கண்கூடு.

 

  1. அசோலாவை வயலில்  பயிரின் எந்த பருவத்தில் இடப்பட வேண்டு்ம்  மற்றும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இட வேண்டும் என்ற தகவல் எந்த சந்தர்ப்பத்திலும் விவசாய திணைக்கள குறிப்புகளில் சரியாக இல்லை. இன்னமும் சொல்ல போனால் இலங்கையின் விவசாய திணைக்களத்தின் உத்தியோகபூர்வமான தளமாகிய doa.gov.lk  இல் நெற்செய்கைக்கோ அல்லது பிற பயிர்களுக்கோ அசோலாவை பயன்படுத்துதல் பற்றிய எந்தவிதமான மேம்படுத்தப்பட்ட  குறிப்பும் இல்லை. A low cost high quality additional feed supplement for farm animals in Sri Lanka என்கின்ற சிறு குறிப்பு புத்தகத்தில் கால்நடைகளான மாடு கோழிக்கான பயன்பாடு பற்றிய குறிப்பே உள்ளது.

Veterinary Research Institute of Sri Lanka; on "Azolla cultivation for feeding livestock in small scale farming systems of Sri Lanka" revealed that farmers in the study have experienced increased milk production performances in dairy cattle as well as increased egg production performances in chicken.

மேலும் எமது விவசாயிகளை போலவே  சகோதர  சிங்கள விவசாயிகள் இவற்றை பயன்படுத்தி வெற்றிகண்டதற்கான எந்த குறிப்பும் இல்லை.

 

பிரயோக ரீதியிலான பிரச்சனைகள்

  1. நெற்செய்கையில் களை, பூச்சி,பங்கசு போன்ற பீடை கட்டுப்பாட்டின் போது நீரை வெளியேற்ற வேண்டியதாக உள்ளது. நீரை வெளியேற்றி மருந்து விசிறும்போது அசோலாவும் இல்லாது போய்விடும்.

2.பயிரின் எந்தபருவத்தில் அசோலாவை இடுவது என்றும் இடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு அசோலா இடுதல் வேண்டும் என்பதை விவசாயிகள் பலர் அறிய இல்லை.

சரி அசோலாவை நெல் தளத்தில் வளர்ப்பதில் உள்ள தவறு என்ன??

நெல் தளம் அடிப்படையில் நெல்லை காயவைக்க உதவும் இடம். இதன் அர்த்தம் தளம் வெப்பமான இருக்கும்.

வெப்பத்தை கட்டுப்படுத்த shade நெட் பாவிக்கலாம் என்பது  அர்த்தமற்ற கதை.இந்த செலவீனம் நெற்செய்கையில் இலாபம் தராது.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் வெப்பம் இல்லாத காலம் மிக குறைவு

 

போதுமான நெல்தளங்கள் வடமாகாணத்தில் உள்ளதா

விவசாயிகள் தங்களது விளைபொருளான நெல்லை உலர்த்துவதற்கே போதுமான தளங்கள் இல்லை. காய்ந்த நெல்லிற்கு விவை அதிகம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை நெல்லினை பச்சையாகவே விற்பனை செய்கின்றனர்.இதற்கு போதுமான நெல் காயவைக்கும் தளங்கள் இல்லாமையும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். ஆயினும் சில விவசாயிகள் வீதிகளில் நெல்லினை காயவைத்து விற்பனை செய்கின்றனர். இதன்போது பாதைகளில் வாகணங்களை  செலுத்துதலில் அசௌகரியங்கள், விபத்துக்கள் போன்றன நடந்துள்ளன.

ஏற்கனவே உள்ள தளங்களது தரங்கள் மிக மோசமானது மற்றும் இதன் கட்டுமானங்களின் போது நிதிகையாடல்கள் நடந்திருக்கின்றன. சில தளங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன

நெல் தளங்களில் நீரினை இட்டு அசோலா வளர்ப்பதால் தளத்திற்கு பாதிப்பு ஏற்படாதா??

பொறிமுறை சேதங்கள் ஏற்பட வாய்பு குறைவு ஆயினும் வடமாகாணத்திலுள்ள பல தளங்கள் வேலிகள் இட்டு அடைக்கப்படாதவை  அதே போல் கால்நடைகளும் கட்டி வளர்க்கப்படாதவை தளத்தில் பசுமையான உணவை கானும் போது கால்டைகள் தளத்தினை நோக்கி வந்து தளத்தினை பாதிக்க செய்யும்.இதற்கு பாதுகாப்பு வெயிலுக்கு வலையிடுவது எல்லாம் அதிகமான செலவு ஆகும்

 

சரி இந்த முட்டாள் தனமான திட்டம் எங்கே உருவானது.

இந்த திட்டமானது முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் தலைமை அதிகாரிகளை கவர்வதற்காக புதிய முயற்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இப்போது அங்கு கூட இது செய்யப்படுவது இல்லை.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்த உத்தியோகத்தர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்

முன்னைய மாகாண விவசாய பணிப்பாளரது சிந்திக்கும் ஆற்றலுக்கு தீனிபோட்ட அசோலா வளர்ப்பு விஸ்வரூபம் எடுத்து அது மாகாணம் முழுவதும் உள்ள விவசாய உத்தியோகத்தர்களை வலிந்து திணித்தார்கள். இயல்பாக சற்று சிந்தித்து இருந்தால் கூட இது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல என ஒரு படிக்காத பாமரனுக்கும் விளங்கும். slags எனும் இலங்கையின் விவசாய சேவைகள் பரீட்சை எழுதி தனது இருக்கையை விட்டு எழுப்பாமல் 10 வருடமாக சேவையாற்றியவருக்கு இது தெரிய வருவது கடினம் தான்.

இந்த அர்த்தமற்ற செயல்பாட்டிற்கு விவசாய உத்தியோகத்தர்களது நேரம் உழைப்பு வீணடிக்கப்பட்டதோடு இதற்காக progress report, presentation,video clips என உத்தியோகத்தர்களை படாதபாடு படுத்தியுள்ளனர்.

உத்தியோகத்தர்களுக்கான கூட்டங்களில் இது செய்யாத உத்தியோகத்தர்களை திட்டுவது அதனை செய்ய முடியாததிற்கான காரணங்களை கோருவது, காரணம் கோரும் போது அதற்கான விளக்கம் கொடுத்தாலும் உந்த வியாக்கியானம் எல்லாம் வேணாம் நான் சொல்வதை செய் அதவிட்டுட்டு விசர்கதை கதைக்க வேணாம் என்ற பதில்கள் தான் வந்துள்ளது.

அசேலாவை விவசாயத்தில் பயன்படுத்த முடியாதா 

 நிச்சயமாக முடியும். விவசாயத்தில் காலடநடைக்கான உணவாக இதனை பயன்படுத்த முடியும். இதுபற்றிய பல ஆராய்ச்சிகட்டுரைகள் உள்ளன. மேலும் அசோலாவை வளர்பதற்கான பெரயிளவிலான பைகளும் உள்ளன. இதனை 2021 சேதன விவசாயத்திட்டத்தில் மானிய விலை அடிப்படையில் விவசாய விரிவாக்கம் வழங்கியுள்ளது ஆயினும் இது கால்நடை விவசாயிகளுக்கே மிகப்பொருத்தமானவை. இவ்வாறு விவசாயத்திணைக்களத்தினால் பெறப்பட்டு விவசாயிகள் இதனை பெறுவதற்கு ஆர்வம் காட்டாமையால் பல விவசாய விரிவாக்கல் நிலையங்களில் இவை தேங்கியுள்ளன. இதனை விற்பதற்கு பத்திரிக்கைகள் சமூக ஊடகங்களில் பல விவசாய உத்தியோகத்தர்கள் விளம்பரப்படுத்தியும் விவசாயிகள் வாங்க இல்லை. ஆயினும் கால்நடை வளர்க்கும் சில விவசாயிகள் இதளை பெற்று பயன் அடைந்துள்ளனர். 

தனது திணைக்களத்திற்க எது தேவை எது தேவையில்லை என்பதை கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை 

 ஆராய்சிகள் தேவை 

அசோலாவை பயிர் விவசாயத்தில் எவ்வாறு பயன்படுத்துவது எந்தளவு பயன்படுத்துவது என்பதற்கான ஆராய்சிகள்  தேவைப்படுகிறது இதனை சிறியளவில் செய்து அதளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் 

 

முடிவுரை

நெல் உலர்த்தும் இடங்களில் அசோலாவை பயிரிடுவது ஒரு நிலையான மற்றும் புதுமையான அணுகுமுறையாகும், அதே நேரத்தில் இயற்கை உரங்களை உற்பத்தி செய்து களைகளை அடக்குகிறது. இது விவசாயிகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது மேலும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் திறமையான விவசாயத்திற்கு பங்களிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அசோலாவை நெல் சாகுபடியுடன் சேர்த்து வளர்க்கலாமா?

ஆம், அசோலாவை நெல் சாகுபடியுடன் சேர்த்து வளர்க்கலாம். இது நெற்பயிர்களுக்கு இயற்கை உரமாகவும், களை அடக்கியாகவும் செயல்படுகிறது.
அசோலாவை எத்தனை முறை அறுவடை செய்ய வேண்டும்?

பொதுவாக 7-10 நாட்களுக்கு ஒருமுறை, கூட்ட நெரிசலைத் தடுக்க, அசோலாவை வழக்கமாக அறுவடை செய்ய வேண்டும்.
அசோலா சாகுபடி அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றதா?

அசோலா வெப்பமண்டல மற்றும் மிதமான காலநிலையில் தண்ணீர் மற்றும் சூரிய ஒளியுடன் செழித்து வளர்கிறது.
அசோலாவைப் பாதிக்கும் பொதுவான பூச்சிகள் மற்றும் நோய்கள் யாவை?

அசோலா ஒப்பீட்டளவில் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருப்பினும், நத்தை தொற்று போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும்.
அசோலாவை மற்ற பயிர்களுக்கு எப்படி இயற்கை உரமாக பயன்படுத்தலாம்?

அசோலாவை அறுவடை செய்து, மற்ற பயிர்களுக்கு நேரடியாக இயற்கை உரமாகப் பயன்படுத்தி, நைட்ரஜன் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கலாம்.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow