2023 டிசம்பர் 16 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

தினசரி வானிலைத்தகவலை அறிந்து கொள்ளுவதன் மூலம் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்

UACUAC
Dec 15, 2023 - 18:51
 0  164
2023 டிசம்பர் 16 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023 டிசம்பர் 16 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

அலை வடிவ வளிமண்டல இடையூறு காரணமாக, மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழையின் நிலை:
கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. கொழும்பில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

கடல் நிலை:
கொழும்பில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வரையில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதானநகரங்களுக்கான வானிலை  முன்னறிவித்தல்                                                                திகதி : 2023-12-16
நகரம் வெப்பநிலை (0C) சாரீரப்பதன் (%) வானிலை
உச்ச குறைந்த உச்ச குறைந்த
அனுராதபுரம் 27 24 95 80 மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
மட்டக்களப்பு 28 24 95 85 மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கொழும்பு 29 24 95 75 மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
காலி 29 24 95 80 மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்
யாழ்ப்பாணம் 27 23 95 80 அவ்வப்போது மழை பெய்யும்
கண்டி 27 21 95 80 அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா 18 13 95 80 அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இரத்தினபுரி 29 22 95 80 மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை 28 24 95 80 மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
மன்னார் 29 24 95 75 அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow