2023 டிசம்பர் 13 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
தினசரி வானிலைத்தகவலை அறிந்து கொள்ளுவதன் மூலம் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மற்றும் சில இடங்களில் சுமார் 75 மி.மீட்டர் அளவுக்கு கனமழை பெய்யக்கூடும்
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்
மழையின் நிலை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு முதல் மிதமானது வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் | திகதி : | 2023-12-13 | |||
நகரம் | வெப்பநிலை (0C) | சாரீரப்பதன் (%) | வானிலை | ||
உச்ச | குறைந்த | உச்ச | குறைந்த | ||
அனுராதபுரம் | 31 | 24 | 95 | 75 | அடிக்கடி மழைபெய்யும் |
மட்டக்களப்பு | 31 | 25 | 90 | 80 | அடிக்கடி மழைபெய்யும் |
கொழும்பு | 31 | 25 | 95 | 70 | பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும் |
காலி | 30 | 25 | 95 | 80 | பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும் |
யாழ்ப்பாணம் | 31 | 26 | 95 | 85 | சிறிதளவில் மழைபெய்யும் |
கண்டி | 30 | 22 | 95 | 70 | அடிக்கடி மழைபெய்யும் |
நுவரெலியா | 20 | 13 | 95 | 80 | அடிக்கடி மழைபெய்யும் |
இரத்தினபுரி | 33 | 23 | 95 | 70 | பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும் |
திருகோணமலை | 31 | 24 | 95 | 80 | அடிக்கடி மழைபெய்யும் |
மன்னார் | 31 | 26 | 95 | 80 | பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும் |
What's Your Reaction?