பிரதி மாகாண பணிப்பாளரே வந்தாலும் விவசாயிகள் வரமாட்டார்கள்

விவசாய விரிவாக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியை காட்டும் ஒரு உண்மை சம்பவத்தின் சிறு தொகுப்பு

Apr 13, 2024 - 05:41
Apr 13, 2024 - 06:46
 0  147
பிரதி மாகாண பணிப்பாளரே வந்தாலும் விவசாயிகள் வரமாட்டார்கள்
agriculture extention vs farmers

இலங்கையில் விவசாயத்துறை இருக்கிறதா என்றா கேள்வியை எழுப்பினால்,  இருக்கிறது என்று நான்கு படங்களை போட்டு ஒப்பேத்தும் கைங்கரியத்தை பலகாலமாக விவசாயத்துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் செய்து வருகின்றனர். இல்லாத விடயத்தை இருப்பதாக காட்டியும் இருக்கின்ற விடயத்தை இல்லை என்று காட்டியும் அறிக்கையிடுவதில் விவசாயத்துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் வல்லவர்கள். 

அறிக்கையிடுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயற்பட்டால் எதையும் செய்ய முடியாது என்பதை பலகாலமாக விவசாயத்திணைக்களம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு தேவை procress  மட்டும் தான். அதில் என்ன உண்மை இருக்கிறது பொய் இருக்கிறது என்பது பற்றி எந்த கவலையும் இல்லை.

இந்த பொய்யான data கள் தான் நாட்டின் பொலிசியை உருவாக்குவதில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் எந்த கவலையும் இல்லை.இவர்களுக்கு எப்படி கவலை இல்லையோ அது போலதான் விவசாயிகளுக்கும் விவசாய விரிவாக்கத்தின் மீது மரியாதையும் இல்லை மதிப்பும் இல்லை.விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் விவசாயிகளது பங்களிப்பு என்பது மிக மிக குறைவு.
உதாரணமாக விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு பயிர் பாதுகாப்பு முகாம்கள் என எந்தவொரு திட்டத்திலும் விவசாயிகளது பங்களிப்பு இருக்காது. ஆனால் விவசாய உத்தியோகத்தர்களது முகத்திற்காக வருகிறோம் என்று வருகின்ற ஒன்று இரண்டு விவசாயிகளை பல ஆங்கில்களில் போட்டோ எடுத்து புரோகிறசில் இணைத்து விடுவார்கள். வந்த 5 பேரினது பெயரினை 30 ஆக மாற்றி அன்றைய நாளுக்கான பயிற்சி வகுப்பு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் முறையை பாடவிதான உத்தியோகத்தர்கள் அறிந்து இருக்கிறார்கள்.  ( ஒரு பயிற்சி வகுப்புக்கான கொடுப்பனவு வெறும் 1500 தொடக்கம் 2000 என்று விடமுடியாது. சிறு துளி பெரு வெள்ளம். கடந்த 2019 தொடக்கம் 2020 காலப்பகுதியில் மன்னாரில் ஒரு விவசாய உத்தியோகத்தர் பிரிவில் மட்டும் ஒரு வருட காலப்பகுதியல் மாத்திரம்  பயிற்சி வகுப்பு வயல் விழா உட்பட 60 தடவை கொடுப்பனவு வழங்கப்பட்டு இருந்தது. ) 

 விவசாயத்திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற இந்த சேவைகள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியது அதிலும் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்ற சேவை இருந்தாலும் விவசாயிகள் இவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்ன காரணம்.

(குறித்த படம் முகநூலில் இருந்து பெறப்பட்டது) 

அண்மையில் கிளிநொச்சியில் ஒரு விவசாய உத்தியோகத்தர் பிரிவில் விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு முகாம் நடத்தப்பட்டது அதே போல் விவசாய பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது அதன் புகைப்படங்களை முகநூலி பார்க்கலாம் அந்த நிகழ்ச்சியின் நேரலையும் குறித்த முகநூலில் பகிரப்பட்டு இருந்தது.  அவற்றை நன்றாக பார்த்தால் மொத்தமாக 10 பேர் கூட தாண்டாது. அதில் ஒருவர் பிரதி மாகாண பணிப்பாளர் ஒருவர் பாடவிதான உத்தியோகத்தர் இரண்டு விவசாய உத்தியோகத்தர்கள் அவ்வளவு தான். பிரதி மாகாண பணிப்பாளரே வந்தாலும் விவசாயிகள் வரமாட்டார்கள் வருகிறார்கள் என்ற உண்மையை விவசாய உத்தியோகத்தர்கள் அறிந்து கொள்ள வேண்டும். விதைகள் பொருட்கள் கொடுத்தால் மாத்திரம் வருவார்கள் அதற்கு மாத்திரமே வருவார்கள் விரிவாகத்தில் பல குறைபாடுகள் உள்ளன அந்த காரணங்களை கண்டு களையாமல் இருக்கும் வரை இவை தொடரும்...  

ஏற்கனவே கிளிநொச்சி அம்மாச்சியில் ஊழல் மற்றும் ஒழுங்கின்மை காணப்படுகிறது அதனை மறைக்க தான் இந்தமாதியான நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் உள்ளது. இருந்தும் இவையும் பயனற்றவை தான் 

(குறித்த படம் முகநூலில் இருந்து பெறப்பட்டது) 

இந்த நிகழ்ச்சிக்கு தான் அன்றைய நாள் ஒதுக்கப்பட்டது. நாள் ஒதுக்கப்பட்டதில் தவறு இல்லை விவசாயிகள் குறைவாக வந்ததும் தவறு இல்லை. இதனை எப்போதும் தொடர்ந்து செய்வது தான் தவறு.  இவ்வாறு விவசாயிகள் மத்தியில் விவசாய விரிவாக்கம் தேவை இல்லை பயனற்றது என்ற கருத்து இருக்கும் போது அதற்கான காரணத்தை தேடி அவற்றை தடுக்க வேண்டும் திருத்த வேண்டும் மாறாக மறைக்க கூடாது. 

இந்த பதிவிற்கு பிறகு நடக்க கூடியவற்றை கணிக்கிறோம்

  • குறித்த முகநூல் கணக்கிலிருந்து குறித்த போட்டோ வீடியோ நீக்கப்படும் ( நாம் அவற்றை ஏற்கனவே பிரதி செய்து விட்டோம்)
  • அலைப்புக்கள் குரல் பதிவுகள் வரலாம் 

இவற்றை தவிர்த்து என்ன மாதரியான தவறுகள் விவசாய விரிவாக்கத்தில் இருக்கின்றன என்பதை  அறிய விரும்பினால் தொடரும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் 

LINK விவசாய விரிவாக்கத்தில் இருக்கின்ற தவறுகள் - (agricultureinformation.lk)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow