கோனோ களைகட்டும் கருவி

நெற்செய்கையில் முதலாவது மேற்கட்டு பசளைகளை இடுவதற்கு முன் சிறந்த முறையில் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.
இது நெற்செய்கையில் விளைச்சலில் செல்வாக்கு செலுத்தும் காரணியாகும். இதன் மூலம் களைக்கட்டுப்படுத்தும் போது மண் தூர்வையாக்கப்படும்.
நாளொன்றிற்கு 3/4 ஏக்கர் நிலப்பரப்பில் களைகளைக் கட்டுப்படுத்த முடிவதுடன் இயக்குவதற்கு ஒருவர் போதுமானதாகும். இதைப் பயன்படுத்த
நெற் செடியின் வரிசைகளிற்கிடையேயான இடைவெளி 8 அங்குலமாக காணப்படல் அவசியமாகும்.
கோனோ களைக்கட்டும் கருவியின் நன்மைகள்
- இக் கருவியை நெல் வரிசைகளிற்கிடையே இயக்கி பயணிக்கும் போது பால் வேர்கள் அறுபட்டு புதிய வேர்கள் உருவாவதனால் நெற் பயிரில் அதிக
- மட்டங்கள் உருவாகி அறுவடை செய்யும் காலப் பகுதியில் நெல் சரிந்து விழுவது குறையும்.
- கோண வடிவான அமைப்பு இரண்டு வரிசைகளின் ஓரங்களிலும் சேற்றை அணைப்பதால் வீரியமான மட்டங்கள் உருவாக ஏதுவாக அமையும்.
- களைநாசினிகளை விசிற வேண்டிய அவசியமில்லை என்பதால் அதற்கான செலவும் குறைவடைவதுடன் சூழல் மாசடைதலும் தடுக்கப்படும்.
- களைநாசினிக்காக செலவாகும் அந்நிய செலாவானியையும் மீதப்படுத்தலாம்.
- இதன் தற்போதய சந்தை விலை ரூபா 60000 ஆகும்
What's Your Reaction?






